மோடியின் உரையை கேட்க ஐ.நா.வுக்கு எதிர்பாராமல் வந்த டிரம்ப்

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரையை கேட்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென வருகை தந்த சம்பவம், உலகத்தலைவர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐ.நா., பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றுள்ளார். இதில் முதல் கட்டமாக, ஹூஸ்டன் நகரில், பல்வேறு நிகழ்ச்சிகளில், மோடி பங்கேற்றார். அதன் பின் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று, பருவநிலை மாற்றம், மரபுசாரா எரிசக்தி குறித்து பேசினார். அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்தார். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து சுமார்15 நிமிடம் மோடியின் உரையையும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் பேச்சினையும் கேட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Exit mobile version