பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுரை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுரை வழங்கி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் சுமார் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினார். அப்போது பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருவதாக டிரம்பிடம், மோடி தெரிவித்தார். இந்தப் பேச்சுக்குப் பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தியாவுடன் நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என இம்ரான்கானுக்கு டிரம்ப் அறிவுரை வழங்கி உள்ளார். காஷ்மீரில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இருநாடுகளும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுப் பிரதமர்களிடமும் பேசியது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், எந்தப் பதற்றமான சூழலையும் நல்ல பேச்சுவார்த்தையின் மூலம் தணிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version