நிலாவை விட பெரிய விசயங்களில் கவனம் செலுத்த நாசாவுக்கு ட்ரம்ப் அறிவுறுத்தல்

நிலவு தொடர்பாக பேசுவதை தவிர்த்து வேறு பல பெரிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நமது அனைத்து நிதியையும் கொண்டு, நிலவுக்கு செல்வது பற்றி நாசா பேசி கொண்டிருக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே அதனை செய்துவிட்டதாகவும், அதனைவிட மிகப் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செவ்வாய் கிரகம், பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டிரம்ப் நாசாவுக்கு அறிவுறுத்தி உள்ளார். விண்வெளி ஆய்வுக்காக கூடுதலாக 160 கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்குவதற்கான ஒப்புதல் வழங்க பரிசீலித்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version