வரி மற்றும் வங்கி மோசடி வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளரான பால் மானஃபோர்ட்டுக்கு 47 மாத சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வந்தது வெளிநாட்டு வங்கிக்கணக்கு மூலம் மான்ஃபோர்ட் 18 மில்லியன் டாலர் பணமோசடி செய்து, அதன் மூலம் சொத்துக்களையும் பொருட்களையும் வாங்கியது அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. இதனால் பால் மானஃபோர்ட்டுக்கு 47 மாத சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.