மே மாதத்துக்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால், ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2020ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டி, ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஜப்பானிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மே மாத இறுதிக்குள், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், போட்டியை தள்ளிவைக்க வாய்ப்பில்லை எனவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பவுண்ட் தெரிவித்துள்ளார்.