விறுவிறுப்பாக நடைபெற்று வரும் திரிஷ்யம் 2 படப்பிடிப்பு – புகைப்படம் இணையத்தில் வைரல்

திரிஷ்யம் -2 படப்பிடிக்கு இடையே சக நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் மோகன்லால் தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்

மலையாளத்தில் நிஷிகாந்த் கமட் இயக்கி மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் திரிஷ்யம். 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மெகாஹிட் ஆன திரிஷ்யம் படம் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தின் தொடுபுழாவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேளையில், மோகன்லால் சக நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

Exit mobile version