திரிஷாவின் ”கர்ஜனை” திரைப்படத்தின் தேதி அறிவிப்பு

திரிஷாவின்  ”கர்ஜனை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை திரிஷாவிற்கு 96 திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதை ”SIIMA awards” அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு நற்செய்தியாக திரிஷாவின் ”கர்ஜனை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அறிமுக இயக்குநரான சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட கால தாமதமான ”கர்ஜனை” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்காத நிலையில், தற்போது செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் படக்குழு சார்பில் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version