70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எழுத்தாளர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக்க பல இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். 5 பாகங்களை கொண்ட அந்நாவலை 3 மணி நேரத்திற்குள் எடுப்பதென்பது நிச்சயம் சவாலான காரியம் தான்.
இதற்கிடையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க உள்ளார். கடந்த காலங்களில் அவரும் பலமுறை முயற்சி செய்து அதில் தோல்வியடைந்துள்ளார். ஆனால் இந்தமுறை தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை எடுத்தே தீருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெயம்ரவி,விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அமலாபால், ஜெயராம் என இந்திய திரையுலகத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு நடிக்க உள்ளனர். தற்போது இந்த வரிசையில் நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய “ஆய்த எழுத்து” திரைப்படத்திலும் த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.