திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் மீது பா.ஜ.கவினர் தாக்குதல்

திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார், முன்னாள் அமைச்சர் பானுலால் சாகா உள்ளிட்ட மார்க்சிஸ்ட் தலைவர்கள், பிஸ்கால்கர்க் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, அகர்தலா திரும்பியபோது, அவர்கள் மீது பா.ஜ.க. இளைஞர் அணியினர் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து மாணிக் சர்க்காரை தொடர்பு கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தெப், மார்க்சிஸ்ட் தலைவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தநிலையில் தாக்குதலை கண்டித்து அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version