திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 2ம் தேதி கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. கடையின் சுவற்றை துளையிட்டு, 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட தனிப்படை காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் என்பவரை திருவாரூரில் வாகன சோதனையில் பிடித்தனர். அவரிடம் இருந்து நாலரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது தப்பிய சுரேஷ் என்பவரையும் முக்கிய குற்றவாளியான முருகன் என்பவரையும் தேடி வருகின்றனர். இந்தநிலையில், சுரேஷின் தாய் கனகவல்லியையும் விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், திருவாரூர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த முருகனின் அண்ணன் மகன் முரளியை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.