திருச்சி அரசு மருத்துவமனையில் மலைபோல் குவித்து வைத்துள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நாளொன்றுக்கு ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா உட்பட பிற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்திய முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம் அருகே மலைப் போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் கொரோனா மட்டுமின்றி மேலும் பல நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.