திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருவிழா ரத்து

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருவிழா ரத்து.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு, திருக்கல்யாணம், செட்டிப் பெண் மருத்துவம் மற்றும் சித்திரை திருவிழா ஆகியவை அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் எனப் புகழப்பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயம், மிகவும் பிரசித்திபெற்றது.

இங்கு வருடந்தோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெற கோயில் நிர்வாகம் ஆயத்தம் ஆன நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மலைக்கோட்டயில் வெகுசிறப்பாக நடைபெறும், தாயுமான சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு, திருக்கல்யாணம், செட்டிப் பெண் மருத்துவம் என அனைத்து நிகழ்வுகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மலைக்கோட்டை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version