இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் முழு வலிமையும் ராணுவத்திற்கு உள்ளதாக அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில், ராணுவத்தின் அர்ப்பணிப்பு உணர்வை நினைவு கூரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கியுள்ளது. 30 வருடங்கள் பின்பு புதிய வடிவில் வந்துள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கையின் முப்படையினருக்கும், காவல்துறையினருக்கும், உளவுப் பிரிவுக்கும் போதிய வல்லமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.