நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பத்து தலைமுறைகளாக மின்சார வசதியின்றி தவித்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் முடிவு செய்யப்படாத பிரிவில் 17 வகையிலான நிலங்கள் இருந்தன. அவற்றில் எந்த வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழகஅரசின் முயற்சியால், ஆதிவாசி கிராமங்களில் மட்டும் இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் தளர்த்தியது. பின்னர் 69 ஆதிவாசி கிராமங்களில், மின்இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள 9 கோடியே 43 லட்சத்தி 83 ஆயிரம் ரூபாயை மதிப்பீட்டில், தமிழக அரசு பணிகளை துவக்கியுள்ளது. இதனால் 10 தலைமுறைகளாக இருளில் தவித்து வந்த ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்கள், தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.