சீர் மரபினர் சமூகம் இனி சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்றம்

சீர்மரபினர் சமூகம் சீர் மரபினர் பழங்குடியினர் என மாற்றம் செய்து அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீர்மரபினர் சமூகத்தை சீர்மரபினர் பழங்குடியினர் என மீண்டும் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசுக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தேவையான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் அவர்களை சீர்மரபினர் பழங்குடியினர் அழைக்கப்படுவார்கள் என புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1979 ஆம் ஆண்டு முன்பு வரை சீர்மரபினர் பழங்குடியினர் என்று இருந்ததை சீர்மரபினர் என்று மாற்றப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த அரசாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version