மாரி 2 திரைப்படத்தின் மாரிகெத்து என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள படம் மாரி 2.
மாரி 2 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ரௌடி பேபி பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், நேற்று மாரி கெத்து என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.
யுவன் ஷங்கர் ராஜாவும் தனுஷும் இணைந்து இந்த பாடலை எழுதியுள்ளனர். இப்பாடலை யுவன் மற்றும் தனுஷுடன் இணைந்து சின்னபொண்ணுவும் வி.எம். மகாலிங்கமும் பாடியுள்ளனர். நேற்று வெளியான மாரிகெத்து பாடல் யூட்யூபில் ட்ரெண்டாகி வருகிறது.