குன்னூரில் பெர்சிமன் பழத்தை வாங்க ஆர்வம் காட்டும் சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கி இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். குன்னுரில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப்பண்ணை 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பேரிக்காய், பிளம்ஸ், ஆரஞ்சு உள்ளிட்ட பழ மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெர்சிமன் பழங்களின் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மரங்களில் அவை கொத்து கொத்தாக காய்த்துள்ளன.

செப்டம்பர் மாதம் வரை பெர்சிமன் பழ சீசன் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இந்தப்பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட பெர்சிமன் பழங்களை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர் .

Exit mobile version