டிராவல் ஏஜென்சில் பெயரில் பணம் பறிக்கும் நிறுவனங்கள்

டிராவல் ஏஜென்சி என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் சங்கத்தினர் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்

டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் ஆஃப் கோயம்புத்தூர் என்ற அமைப்பு கடந்த 4 ஆண்டுகளாக கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த சங்கம் கோவை ,சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற டிராவல் ஏஜென்ட் மற்றும் டூர் ஆபரேட்டர்கள் மூலம் 65 நிறுவனங்களை உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக டிராவல் ஏஜென்சி என்ற போர்வையில் போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் டிராவல் ஏஜென்சி தொழில் பாதிக்கப்படுவதால் இந்நிறுவனம் சார்பில் கோவை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

Exit mobile version