சென்னையில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த இரண்டே மாதத்தில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நவீன கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை வைத்து மட்டும், இதுவரை 8 ஆயிரத்து 300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில், அதிகபட்சமாக சென்னை அண்ணா நகரில் மட்டும் ஒரே நாளில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது.