திமுக அரசு அகவிலைபடி உயர்வை ஆட்சியில் அமர்ந்து 100 நாட்களில் வழக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், பேச்சுவார்த்தை எனக் கூட்டம் கூட்டிவிட்டு தங்களின் கோரிக்கை குறித்து திமுக அரசு பேச விடுவதில்லை என ஓய்வூதியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது குறித்தும் அரசு ஓய்வூதியர்களுக்கு எதிராக செயல்படும் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அரசு போக்குவரத்து ஓய்வு ஊதியர்கள் நலமீட்பு சங்க செய்தியாளர்கள் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது,
திமுக அரசு தங்களின் தேர்தல் வாக்குறுதியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்நிலை வழங்குவதாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வினை வழங்கலாம் என தீர்ப்பளித்து இருந்தது.
ஆனால் திமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தற்போது வரையில் வழக்கினை காலதாமதம் செய்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அமைச்சர்களிடமும், முதல்வரிடமும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் திமுக அரசியல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்து இருப்பதாக முன்னாள் தலைமைச் செயலார் இறையன்பு தெரிவித்திருந்தார்.
மேலும் இதுகுறித்து திமுக அரசு சார்பில் நடைபெறும் பேச்சு வார்த்தை கூட்டத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கத்தை அனுமதி அளிகக்கபடவதில்லை என குற்றம் சாட்டினர்.
ஆனால் தற்போது வரையில் வாக்குறுதிகளை மட்டும் அளிக்கும் திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் எதையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் நலமீட்பு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post