போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும்-அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

இது குறித்து நியூஸ் ஜெ செய்திகளுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த அவர், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை என்றும் இன்று மாலைக்குள் அனைத்து ஊழியர்களின் வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும் போக்குவரத்து துறை பணியாளர்கள் ஊதியம் குறித்து வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள அமைச்சர், தமிழக அரசு போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

Exit mobile version