போக்குவரத்து தெழிலாளர்களின் போராட்ட அறிவிப்பு வாபஸ் – பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சங்கத்தினர் முடிவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், மூன்றாவது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், 14 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் உடன்பாடு ஏற்படாததால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், நவம்பர் 2-ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை பல்லவன் இலலத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்துள்ளனர். மேலும், தீபாவளி முன்பணமாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில், 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version