நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இங்குள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இந்த முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, பேட்டரி ஸ்கூட்டர், மிதிவண்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருமணத்துக்கு தங்கம், தையல் இயந்திரங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் என 7லட்சத்து 900 ரூபாய் மதிப்பிலான பொருட்களும் அளிக்கப்பட்டன.