ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சரளா

தனது சொந்த காலில் நின்று தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் திருநங்கை சரளா

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் திருநங்கை சரளா. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். வேலை தேடி சென்னை வந்த சரளா 5 ஆண்டுகள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். மூன்றாம் பாலினம் என்பதால் அலைக்கழித்ததாக கூறுகிறார் சரளா.

சைதாப்பேட்டையில் இயங்கும் சமூக அமைப்பு ஒன்றின் மூலம் சரளாவுக்கு ஆட்டோ வாங்க திருநங்கை ஸ்வேதா உதவி செய்துள்ளார். இரவு நேரம் முழுவதும் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து, பகலில் பிற வேலைகள் செய்து மற்ற திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் சரளா..

தனக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்த நண்பருக்கு நன்றி தெரிவிக்கும் சரளா, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் நண்பர்கள், ஆர்வமுள்ள திருநங்கைகளுக்கு வாகனங்களை ஓட்ட கற்றுக்கொடுத்தால் திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்லாமல், சொந்தக்காலில் நிற்க உதவியாக இருக்கும் என்கிறார்.

Exit mobile version