ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருநங்கைகள்

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் திருநங்கைகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர் மக்களவைத் தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில், காக்களூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் திருநங்கைகள் ஏராளமானோர் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தனர்.

Exit mobile version