நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால அட்டவணைப்படி இயக்கப்படும், விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், கட்டணங்கள் முழுமையாக திரும்ப வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ராஜ்தானி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.