கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி நாடெங்கிலும் பல்வேறு முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும் அவை பழுதடைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப் பதிவின்போது வாக்காளர்களை கையாளும் முறை, அவர்களிடம் பெறும் ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டத்தைச்சேர்ந்த வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.