சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

திருச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 315 சிறைக்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில், புதிய காவலர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. திருச்சி சிறைத்துறைக்கு தேர்வான காவலர்களுக்கு 6 மாதகாலம் அடிப்படை பயிற்சிகள், மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் 284 ஆண் காவலர்கள் மற்றும் 31 பெண் காவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததையடுத்து, புதிய காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமை வகித்து அணிவகுப்பை நடத்தி வைத்தார். இதனைதொடர்ந்து பயிற்சி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கபட்டன.

Exit mobile version