கன்னியாகுமரியில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் பயிற்சி முகாம்

மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு, மீன்வளத்தை பெருக்கும் வகையில் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. நேஷனல் ஃபிஷரீஸ் டெவலெப்மெண்ட் போர்ட் மற்றும் நெட்பிஷ் எம்பீடா அமைப்புகள் இணைந்து கடல் பகுதிகளில் மீன்வளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிறு கண்ணிகள் கொண்ட மீன்வலைகளை பெரிய கண்ணிகளாக மாற்றி அந்த வலையில் சிறு மீன்கள் சிக்காதவண்ணம் வலைகளை மாற்றும் பயிற்சியை மீனவர்களுக்கு அளித்தனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version