ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதை இன்று முதல் ரயில் போக்குவரத்து துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நூறு ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் பாம்பன் பாலத்தில் சேதம் ஏற்பட்டதையடுத்து கடந்த டிசம்பர் 4ம் தேதி முதல் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பலகோடி ரூபாய் மதிப்பிட்டில் பாம்பன் பாலத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. தற்பொழுது சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, பாம்பன் ரயில் பாலம் போக்குவரத்திற்கு தயாராகியுள்ளது.இதையடுத்து 84 நாட்களுக்கு பின் இன்று வழக்கம் போல ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில் பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.