நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பயணிகள் ரயில் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், ரயில்வே துறையில் பயணிகள் ரயில் 155 கோடி ரூபாய் நஷடத்தை சந்தித்துள்ளதாகவும், சரக்கு ரயில்கள் கடந்த நிதியாண்டின், இரண்டாம் காலாண்டோடு ஒப்பிடும்போது 3 ஆயிரத்து 901 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், பயணிகள் ரயில் கட்டணம் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.