உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், தடம் புரண்டது. இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள், மீட்பு குழுவினர் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்த 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்க உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version