அரூரில், கவனமின்றி சாலையை கடந்த இருசக்கர வாகனத்தின் மீது, அரசு பேருந்து மோதும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். கொரோனா விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற கன்னியப்பன், மாலை சேலம்-அரூர் தேசிய நெடுஞ்சாலை வழியே வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது, அவர் கவனமின்றி சாலை கடந்த போது, வேகமாக வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் அரசு பேருந்தின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட மாணவன் கன்னியப்பன், தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிழந்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் பதிவாகியுள்ளது. 18 வயது நிரம்பாத பள்ளி மாணவன், இருசக்கர வாகனத்தில் பயணித்தது, தலைக்கவசம் அணியாதது, கவனமின்றி சாலையை கடந்ததே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.