போக்குவரத்து விதி மீறல்-அபராதம் அதிகரிப்பு

சென்னையில் சாலை விதிமீறல்களை ஈடுபடுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபாரதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வக ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் என பலதரப்பட்டவர்கள் சாலை விதிகளை முறையாக கடைபிக்காததாலும், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாததலும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 2019 அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அதிக அளவில் நடைபெறும் போகுவரத்து விதி மீறலுக்கான புதிய அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறினால் 2,000 ரூபாய்,

அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதலுக்கு 5,000 அபராதம்.

தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனம் ஓட்டுதலுக்கு 10,000 அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெரிய வாகனம் ஓட்டுதல் மற்றும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுதலுக்கு 5,000 அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டுதலுக்கு 10,000 அபராதம்

ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருத்தலுக்கு அபராதம் 10,000 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும், அதிகாரிகளின் போக்குவரத்து விதிமீறல்களுக்கு சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version