திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மழை காரணமாக பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்கினர். இதனையடுத்து போக்குவரத்து காவலர் ஒருவர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் கொட்டி பள்ளத்தை சீர் செய்தார். போக்குவரத்து காவலரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.