போக்குவரத்து காவல்துறையின் நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அதிகமான வழக்குகள் பதியப்பட்டன என்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை சாலை விபத்துகளில் 483 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், நிகழாண்டில் அது 271 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 115 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்த நிலையில், நிகழாண்டு ஏப்ரல் மாதத்தில் 15 பேர் மட்டுமே உயிரிழந்ததை சுட்டிக் காட்டியுள்ளது. இதேபோல் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 1161 விபத்துகள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது