விழுப்புரத்தில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தில், பொதுமக்களை விரட்டித்தள்ளியது, போக்குவரத்து நெரிசல் போன்ற சம்பவங்கள் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்தது.
விழுப்புரம் நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது, அவரை பார்க்க கூடிய திமுக தொண்டர்களையும், மக்களையும் பாதுகாவலர்கள் அடித்து, விரட்டினர். இதனால், பொதுமக்கள் மட்டுமில்லாமல், திமுகவினரும் அதிருப்தியடைந்து, அங்கிருந்து சென்றனர். ஸ்டாலின் செல்லும் வரை வியாபாரிகளை கடைகளை திறக்கவிடாமல் திமுகவினரும், விசிகவினரும் அராஜகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாக்கு சேகரிப்பதாக கூறி சென்ற ஸ்டாலினால் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வாகனம் கூட செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். காலையில் பணிக்கு செல்வோர் பேருந்தை தவறவிட்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Discussion about this post