குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் குன்னூர் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மரப்பாலம் அருகே 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன், ராட்சத பாறை விழுந்துள்ளது.

இதனால் சாலையில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாலை முழுமையக சீரமைக்கப்பட்டு மழையின் தாக்கம் குறைந்த பின்னரே, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version