கன்னியாகுமரியில் திமுகவினரின் அராஜக போக்கால் போக்குவரத்து பாதிப்பு

கன்னியாகுமரி மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல் செய்த போது, திமுக காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வரும் மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்த குமார் போட்டியிடுகிறார்.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரசாந்த் முவடநேரே முன்னிலையில் வசந்த குமார் மனு தாக்கல் செய்தார். அப்போது பணம் கொடுத்து அழைக்கப்பட்டு வந்த மதிமுக,திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version