ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் பாம்பன் மற்றும் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்னை மற்றும் கன்னியாகுமரி செல்லும் அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் நோக்கி வந்த பயணிகள் ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில், காற்றின் வேகம் 58 கிலோ மீட்டருக்கு மேல் தொடர்ந்து நீடிப்பதால், தென்னக ரயில்வே அதிகாரிகளால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணச் சீட்டை ரத்து செய்பவர்களுக்கு முழுத்தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.