விழுப்புரத்தில் நடைபெற்ற பாரம்பரிய நெல் விதை கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பசுமை இயற்கை, பசுமைசோலை சார்பில் பாரம்பரிய விதை, இயற்கை காய்கறிகள் திருவிழா மற்றும் கண்காட்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. பாரம்பரிய விதைகள், கீரை வளர்ப்பு முறைகள், காய்கறி சாகுபடிகள், 450-க்கும் மேற்பட்ட நெல் வகைகள், விவசாயம் குறித்த புத்தகங்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பிடித்தன. இயற்கை சாகுபடியில் தொழில்நுட்பத்தை புகுத்தும் முறைகள் பற்றியும், மதிப்பு கூட்டு தொழில்நுட்பம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இயற்கை முறையில் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு கண்காட்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த கண்காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தனர். கண்காட்சி மிகவும் பயனுடையதாக இருந்தது என்றும் அவர்கள் கூறினர்.