பாரம்பரிய நெல், விதைகள் கண்காட்சி

கோவையில் நடைபெற்ற பாரம்பரிய நெல், விதைகள் கண்காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.கோவையில் பாரம்பரிய நெல் மற்றும் விதைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் 450 வகையான பாரம்பரிய நெல் விதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன் 200 வகையான காய்கறிகளின் விதைகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Exit mobile version