உடல் ஆரோக்கியம் பெற பாரம்பரிய சிறுதானிய உணவு முறைக்கு மாற வேண்டும் என மாணவர்களுக்கு நடிகர் சிவக்குமார் அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பீட்சா, பர்க்கர், பாஸ்ட் புட் ஆகியவைகளால் உடலுக்கு கேடு ஏற்படுவதாக மாணவர்களை எச்சரித்தார். ராகி, கேழ்வரகு, பச்சைபயிறு, தட்டை பயிறு, கம்பு, கொள்ளு போன்ற சிறு தானிய உணவுகள் மூலம் நமது உணவு முறைகளை மீட்பதுடன் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார். மாணவர்கள் அதிகாலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசித்து படிப்பதுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டால் மனதுக்கு உற்சாகம் ஏற்படும் என்றும் மாணவர்களுக்கு சிவக்குமார் அறிவுரை வழங்கினார்.