கரூரில் பாரம்பரிய மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 25 காளைகள் பங்கேற்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாரம்பரிய விளையாட்டான மாடு மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 காளைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள தொட்டியப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி மாடு மறித்தல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாடு மறித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர் வரை 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று காளைகளை அடக்கினர். பறை இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர், ஜக்கம்மாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு, பெண்கள் பூஜை செய்து வணங்கினர்.

Exit mobile version