சிவகங்கை அருகே இரணியூர் கண்மாயில் நீர் வற்றியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மீன்பிடித்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள இரணியூர் கண்மாயில் மே, ஜூன் மாதங்களில் நீர் வற்றும் போது மீன்பிடித் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவுவதால், மார்ச் மாதத்திலேயே ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மீன்பிடித்திருவிழாவை நடத்தினர். இதையொட்டி பாரம்பரிய முறைப்படி வலை, கச்சா, ஊத்தக்கூடை ஆகிய உபகரணங்களைப் பயன்படுத்தி குரவை மற்றும் கெண்டை மீன்களைப் பிடித்தனர். கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் கண்மாயில் இறங்கி மீன்பிடித்து மகிழ்ந்தனர்.