கன்னியாகுமரி அருகேயுள்ள விவசாயி ஒருவர் 40-க்கும் மேற்பட்ட பழங்கால விவசாயப் பொருட்கள் மற்றும் கருவிகளை சேகரித்து வைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய விவசாயியான செண்பக சேகரன், தனது மூதாதையர்கள் பயன்படுத்திய பழங்கால விவசாயப் பொருட்கள் மற்றும் கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளார். குறிப்பாக, மரக்கால், நாழி, தோனி, கலப்பை, உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். இதன்மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பாரம்பரியம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை அவர் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார்.