வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இமாச்சல பிரதேசத்தில் 5 ஆயிரம் பெண்கள் தங்களது பாரம்பரிய உடையில் நடத்திய நடனம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களில் நடைபெற்று வரும்நிலையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் குல்லுவில் தால்பூர் மைதானத்தில் கூடிய 5 ஆயிரம் பெண்கள் தங்களது பாரம்பரிய உடையில், வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி நடனம் ஆடினர்.