சேலம் மாவட்டம் வாழப்பாடியில், முதலமைச்சர் வருகையின் போது அகற்றப்பட்ட சாலையோர கடைகளை மீண்டும் அமைக்க அனுமதிக்கக் கோரி, சிறு வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்புறம், சுமார் 200-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்ததையொட்டி, அப்பகுதியில் இருந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் கடைகளை திறக்க முயன்றபோது, நெடுஞ்சாலைத் துறையினர் கடைகளை திறக்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது வரை கடைகள் திறக்காததால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, மீண்டும் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால் வீதிக்கு வந்துவிட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post