வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறையும் என வணிகர்கள் கருத்து

வெளிநாட்டு வெங்காயத்துடன் சேர்ந்து, உள்நாட்டு வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என கோயம்பேடு சந்தை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், எகிப்து போன்ற வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது உள்நாட்டு வெங்காயத்தின் வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால், 180 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த 1 கிலோ வெங்காயம், தற்போது 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசின் முயற்சியால் மட்டுமே விலை குறைந்துள்ளதாகவும், வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், வெங்காயத்தின் விலை மேலும் குறையும் எனவும் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கோவையில் ஒரு கிலோ வெங்காயம் தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால், பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளதாகவும், வெங்காய வரத்து உள்ளதால், ஒரு வார காலத்திற்குள் விலை கட்டுக்குள் வரும் எனவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்த அரசிற்கு வணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version