வாகன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் டொயோட்டா நிறுவனம், தற்போது ஒரு புதிய கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹாரிபாட்டர் படத்த பார்த்த 90s kids எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும். அந்த படத்துல வர்ற பறக்கும் துடைப்பம் மாதிரி தனக்கும் கிடைக்கனும்னு என்று ஒரு ஆசை இருந்திருக்கும். ஹாரிபாட்டர் ரசிகர்களின் கனவுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கு டொயோட்டா நிறுவனம்.
டொயோட்டா நிறுவனம் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தநிலையில் டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய விஷயத்தைச் செய்துள்ளது. அண்மையில் ஜப்பான் தலை நகர் டொக்கியோவில் நடந்த கண்காட்சி ஒன்றில், திரைப்படங்களில் வரும் சூனியக்காரியின் துடைப்பம் போல் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு இந்த துடைப்பத்தை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். வானில் பறந்து செல்ல மற்றும் ஆகாயத்தை வளம் வரவும் இந்த சூனியக்கார துடைப்பத்தை திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். தற்பொழுது அதே வடிவத்தில் ஒரு பொருளை டொயோட்டா நிறுவனம் ஈ-ப்ரூம் (e-broom) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
படத்தில் வருவது போல் இது பறக்காது, ஆனால் உங்களை வேறு இடத்திற்கு எடுத்து செல்லும். ஒரு சிறிய வாகனம் போல் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், வேறு இடங்களுக்கும் செல்லலாம். குறிப்பாக இதைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் கால்களில் ரோலர் ஸ்கெட்டர்களை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம்.
ஈ-ப்ரூம்-ன் பின்பகுதியில் ஒரு சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஒரு சக்திவாய்ந்த மோட்டார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. ரோலர் ஸ்கெட்டர்களை அணிந்துகொண்டு இந்த ஈ-ப்ரூம் விளக்குமாறை தரையில் அழுத்தி அழுத்தம் கொடுத்தால் போதும், தானாக நகர ஆரம்பித்துவிடும். இந்த ஈ-ப்ரூம் பற்றிய முழு விபரங்களை இன்னும் டொயோட்டா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இந்த ஈ -ப்ரூமை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் மட்டும் செய்துள்ளது. எது எப்படியோ ஹாரிபாட்டர் ரசிகர்களின் கனவினை நினைவாக்கிவிட்டது டொயோட்டா நிறுவனம் .